டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச தேர்வு !
இன்றைய போட்டியில் இலங்கை அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளது. இந்தப் போட்டியானது லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச முடிவு செய்தது.
இலங்கை அணி வீரர்கள்:திமுத் கருணாரத்ன (கேப்டன்), குசல் பெரேரா (விக்கெட் கீப்பர்), லஹிரு திரிமன்னே, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா, திசாரா பெரேரா, இசுரு உதனா, மிலிண்டா சிரிவர்தனா, லசித் மலிங்கா, நுவன் பிரதீப் ஆகியோர் இடம் பெற்றனர்.
ஆஸ்திரேலிய அணி வீரர்கள்:ஆரோன் பிஞ்ச் (கேப்டன்),டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப் ஆகியோர் இடம் பெற்றனர்.