டாஸ் வென்ற இலங்கை அணி ! பேட்டிங் செய்ய தேர்வு செய்தது !
இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் , இலங்கை அணியும் மோத உள்ளது. இப்போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டி டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணி வீரர்கள்:ஜேம்ஸ் வின்ஸ், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், ஈயோன் மோர்கன் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷீத், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வூட் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
இலங்கை அணி வீரர்கள்:திமுத் கருணாரத்ன (கேப்டன்), குசல் பெரேரா (விக்கெட் கீப்பர்), அவிஷ்கா பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், திசாரா பெரேரா, ஜீவன் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, இசுரு உதனா, லசித் மலிங்கா, நுவன் பிரதீப் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.