இலங்கை கடற்கரையில் தீ விபத்து.! தீயணைக்க உதவிய இந்திய கடற்படை.!
இலங்கை கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் இலங்கை கடற்படைக்கு உதவியுள்ளனர்.
இலங்கை கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த எம்.டி நியூ டைமண்ட் கப்பலில் இருந்த எண்ணெய் டேங்கரில் தீப்பிடித்தது.
இதனை அணைக்க இலங்கை கடற்படையின் வேண்டுகோளுக்கிணங்க 2200 கிலோ உலர சாயன துகளை இந்திய கடலோர காவல் படையின் மூலமாக இலங்கை கடற்படைக்கு அனுப்பப்பட்டது.
இந்த தீ விபத்தானது செப்டம்பர் 3 ஆம் தேதி தான் முழுதாக அணைக்கப்பட்டது. இந்த தீயை அணைக்க இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் இலங்கை கடற்படைக்கு உதவியுள்ளனர்.
இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கடுமையான தீயை அணைத்ததற்கு பிறகும், அங்கு நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக மீண்டும் தீ ஏற்பட்டது. அதனை தீயணைப்பு வீரர்கள் கணிசமாக கட்டுப்படுத்தி உள்ளனர்.