இலங்கை தொடர் குண்டுவெடிப்பு : உயிரிழந்த 359 பேரில், 39 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்! இலங்கை ராணுவ அமைச்சர் தகவல்
இன்னும் இரண்டு நாட்களில் இலங்கையின் பாதுகாப்பு நிலவரம் உறுதிப்படுத்தப்படும் என்று இலங்கை ராணுவ அமைச்சர் ருவன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தது.இச்சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இலங்கை ராணுவ அமைச்சர் ருவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,இன்னும் இரண்டு நாட்களில் இலங்கையின் பாதுகாப்பு நிலவரம் உறுதிப்படுத்தப்படும்.இலங்கையில் ஓரிரு நாளில் அமைதி திரும்பும்.குண்டுவெடிப்பில் உயிரிழந்த 359 பேரில், 39 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.குண்டுவெடிப்புக்கு தலைமை ஏற்ற தீவிரவாதி உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.