இன்று இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிறது!
இன்று இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.
இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைய இருந்த சூழலில், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தலை நடத்த இருப்பதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்தார்.
இந்நிலையில், இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் நேற்று தேர்தல் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்புடன் இந்த தேர்தல் நடைபெற்றது. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக வாக்குச்சாவடிகளில் 8 ஆயிரம் சுகாதார பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.
மாலை 4 மணி நிலவரப்படி 55 சதவீத வாக்குகள் பதிவானதாக இலங்கை தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு மதியம் 2.30 அளவில் முதல் கட்ட முடிவுகள் வெளியாகும் என்றும், இறுதியான முடிவுகள் நாளை வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.