முடங்கிய சமூக ஊடக தளங்கள் – இலங்கை அரசு அதிரடி!
இலங்கை:அதிபர் ராஜபக்சே அரசுக்கு எதிராக குடிமக்கள் நாடு தழுவிய போராட்டங்களை நடத்த திட்டமிட்ட நிலையில்,வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களை இலங்கை அரசு முடக்கியுள்ளது.
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு மற்றும் விண்ணை முட்டும் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல்,டீசல் தட்டுப்பாடு காரணமாக மக்கள் மண்ணெண்ணையை வாங்க நீண்ட தொலைவிற்கு வரிசையில் நிற்கின்றனர்.குறிப்பாக,13 மணி நேர மின்வெட்டு மக்களை முற்றிலுமாக முடக்கியுள்ளது.
36 மணி நேர முழு ஊரடங்கு:
இதன்காரணமாக,இலங்கையில் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் பொது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.எனினும்,இன்று மாபெரும் போராட்டத்திற்கு இலங்கை மக்கள் அழைப்பு விடுத்திருந்த நிலையில்,இலங்கையில் நேற்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை 36 மணி நேர முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
முடங்கிய சமூக ஊடகங்கள்:
இந்நிலையில்,இலங்கையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும்,பொருளாதார நெருக்கடி தொடர்பாக மிகப்பெரிய அளவில் போராட்டங்களை நடத்துவதற்கு குடிமக்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்ததை அடுத்து,இலங்கை அரசு சமூக ஊடக தளங்களை முடக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
பொது இடங்களுக்குச் செல்ல வேண்டாம்:
36 மணி நேர ஊரடங்குச் சட்டத்தின் போது அனுமதியின்றி யாரும் பொது இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்ததையடுத்து,தற்போது இலங்கை அரசு சமூக ஊடக தளங்களை முடக்கியுள்ளது.
நிகழ்நேர நெட்வொர்க் தரவு:
இதனால்,Twitter, Facebook, WhatsApp, YouTube, Instagram உள்ளிட்ட சமூக ஊடக தளங்களுக்கான அணுகலை தடைசெய்து,நாடு தழுவிய சமூக ஊடக முடக்கத்தை இலங்கை அரசு விதித்துள்ளதாக நிகழ்நேர நெட்வொர்க் தரவு காட்டுகிறது.
⚠️ Confirmed: Real-time network data show Sri Lanka has imposed a nationwide social media blackout, restricting access to platforms including Twitter, Facebook, WhatsApp, YouTube, and Instagram as emergency is declared amid widespread protests.
???? Report: https://t.co/XGvXEFIqom pic.twitter.com/KEpzYfGKjV
— NetBlocks (@netblocks) April 2, 2022