#BigBreaking:பதவியேற்ற 24 மணி நேரத்தில் நிதி அமைச்சர் ராஜினாமா!
இலங்கை:பதவியேற்ற 24 மணி நேரத்தில் நிதி அமைச்சர் அலி சப்ரி ராஜினாமா செய்துள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில்,ஜனாதிபதி, பிரதமரைத் தவிர 26 அமைச்சர்கள் பதவி விலகினர்.இதனைத் தொடர்ந்து,நேற்று அமைச்சர்களின் ராஜினாமா கடிதத்தை அதிபர் கோட்டாபய ராஜபக்சே ஏற்றுக்கொணடார்.
அதன்பின்னர், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே நான்கு புதிய இடைக்கால அமைச்சர்களை நியமித்தார்.அதன்படி,அலி சப்ரியை புதிய நிதி அமைச்சராகவும்,வெளியுறவுத்துறை அமைச்சராக ஜி.எல்.பீரிஸும், புதிய கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தனவும்,புதிய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சராக ஜான்ஸ்டன் பெர்னாண்டோவவையும் ஜனாதிபதி நியமித்தார்.
இந்நிலையில்,இலங்கையில் பதவியேற்ற 24 மணி நேரத்தில் நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து அலி சாப்ரி ராஜினாமா செய்துள்ளார்.இதனிடையே,இன்று கூடிய நாடாளுமன்ற கூட்டத்தில் ஆளும் எஸ்எஸ்பிபி கட்சி பெரும்பானமையை இழக்கிறது. 225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்துக்கு 113 பேர் ஆதரவு தேவை என்ற நிலையில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.