இலங்கை தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்!
இலங்கையில் தொழிலாளர் காங்கிரஸ் கட்சி தலைவரும், அந்நாட்டின் தோட்ட உட்கட்டமைப்பு வளர்ச்சித்துறை அமைச்சரான ஆறுமுகம் தொண்டமான், நேற்று காலமானார்.
இலங்கை நாட்டில் முக்கிய அரசியல்வாதியும், தொழிலாளர் காங்கிரஸ் கட்சி தலைவர் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வளர்ச்சித்துறை அமைச்சரான 56 வயதான ஆறுமுகம் தொண்டமான், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை தலங்கம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.