இலங்கை : பூஸ்டர் டோஸ் போடும் பணி தொடக்கம்…!
இலங்கையில் கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் டோஸ் போடும் பணிகள் தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளிலும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசிகள் இரண்டு கட்டமாக செலுத்தப்படுகிறது. இந்த இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய பின்னரும் தொற்று ஏற்படக் கூடாது என்பதற்காக பூஸ்டர் தடுப்பூசி சில நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.
அந்த வகையில் இலங்கையிலும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட முன் களப் பணியாளர்களுக்கு பைசர் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் ஊரடங்கு தளர்வுகளும் விதிக்கப்பட்டுள்ளது. எனவே கொரோனா மீண்டும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என வல்லுனர்கள் எச்சரித்து உள்ளதால், அங்கு பூஸ்டர் டோஸ் போடும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.