உலகக்கோப்பையில் முதல் இடத்தில் இருக்கும் இலங்கை , ஆஸ்திரேலிய அணி கேப்டன்கள்
நேற்றைய போட்டியில் இலங்கை அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதியது. இந்தப் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச முடிவு செய்தது.
முதலில்இறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 334 ரன்கள் குவித்தனர்.பின்னர் இறங்கிய இலங்கை அணி 45.5 ஓவரில் 247 ரன்கள் மட்டுமே எடுத்து 87 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியடைந்தது.
இந்நிலையில் போட்டியில் இரு அணி கேப்டன்களும் மிக சிறப்பாக விளையாடினர். அதன் படி ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் 153 ரன்கள் குவித்தார். இலங்கை அணி கேப்டன் டிமுத் கருணாரட்ன 97ரன்கள் எடுத்து சதம் அடிக்க தவறினார்.
நடந்து முடிந்த உலககோப்பைகளில் ஒரு போட்டியில் இரு அணிகளின் கேப்டன்களும் அடித்த ரன்களின் கூடுதலில் முதல் இடத்தில் இருப்பது ஆரோன் பிஞ்ச், டிமுத் கருணாரட்ன. இவர்கள் நேற்றைய போட்டியில் மூலம் 250 ரன்கள் குவித்தனர்.
250 (153 + 97): AUS v SL, 2019
223 (138 + 85*): IND v ZIM, 2015
218 (181 + 37*): WI v SL, 1987
218 (162* + 56): SA v WI, 2015