2018 தமிழக பட்ஜெட்: ரூ.109. 42 கோடி இலங்கைத் தமிழ் அகதிகளின் நலத் திட்டங்களுக்கு ஒதுக்கீடு!
ரூ.109. 42 கோடி தமிழக பட்ஜெட்டில் இலங்கைத் தமிழ் அகதிகளின் நலத் திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமூக நலத்துறைக்கான தமிழக பட்ஜெட்டில் ரூ.5,611.62 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது .பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.973 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் நலத்துறைக்காக ரூ.333.82 கோடி தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.குழந்தைக்களுக்கான இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டத்தை செயல்படுத்த ரூ. 200.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக அரசின் வருவாய் ரூ. 1.81 லட்சம் கோடி,செலவு ரூ. 2. 04 லட்சம் கோடி, பற்றாக்குறை ரூ. 23 ஆயிரத்து 176 கோடி என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.