மூன்று வருடங்களுக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுக்கும் ஸ்ரீதிவ்யா.!யாருடன் ஜோடி போடுகிறார் தெரியுமா .?
நடிகை ஸ்ரீதிவ்யா மூன்று வருடங்களுக்கு பிறகு பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்து ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு “சங்கிலி புங்கிலி கதவ தொற” எனும் படத்தில் கடைசியாக நடித்திருந்தார் நடிகை ஸ்ரீதிவ்யா.சினிமாவிலிருந்து மூன்று வருடங்களாக விலகி இருந்த இவர் தற்போது மீண்டும் ஒரு இளம் நடிகருக்கு ஜோடியாக நடித்து ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார் .
அதர்வாவின் பாணா காத்தாடி ,செம போத ஆகாதே உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பத்ரி வெங்கடேஷ் .இவர் தான் ஸ்ரீதிவ்யாவின் அடுத்த படத்தை இயக்குகிறார் .அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் இந்த படத்தில் ஸ்ரீதிவ்யாவிற்கு ஜோடியாக கௌதம் கார்த்திக் நடிக்கவுள்ளார் .மேலும் இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா பிசியோதெரபி டாக்டராக நடிப்பதாக இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.மேலும் படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கவும்,திருவல்லிக்கேணி, வடசென்னை, கட்ச், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது.