ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேர் திருவிழா வெகுச்சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேர் திருவிழா நிகழ்வானது கடந்த 30ந்தேதி கொடியேற்றத்தோடு தொடங்கியது. இவ்விழாவின் 4ம் நாளான பிப்., 2ந்தேதி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள் முக்கிய வீதிகள் வழியாக உத்தர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்காட்சி அளித்தார்.
8ம் நாளான நேற்று முன்தினம் மாலையில் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு உத்தர வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டு அருளினார்.இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஆனது நேற்று நடைபெற்றது.ரெங்கா..ரெங்கா..நாராயணா..கோவிந்தா..போன்ற நாம முழக்கங்களை எழுப்பிய வாரே தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.
இந்நிகழ்விற்காக நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 4.30 மணிக்கு எல்லாம் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தை தேர் மண்டபத்திற்கு சரியாக 5.15 மணிக்கு வந்தார். 5.15 மணிமுதல் 5.45 மணிவரை தனுர் லக்னத்தில் ரதரோஹணம் நிகழ்ச்சியானது நடைபெற்றது.நிறைவு நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு மாலை 3.30 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வந்தடைகிறார். அங்கிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு வாகன மண்டபம் செல்கிறார். வாகன மண்டபத்தில் இருந்து இரவு 8 மணிக்கு நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் புறப்பட்டு நான்கு உத்தர வீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு வாகன மண்டபத்திற்கு மீண்டும் வந்தடையும் அற்புதமாக நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…
சென்னை : இன்று சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள…
சென்னை : நேற்று முன்தினம் தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான முக்கிய நிகழ்வு நடைப்பெற்றது. மத்திய அமைச்சரும், பாஜக மூத்த…
ஹைதராபாத் : நேற்று (ஏப்ரல் 12) நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டதை அடுத்து, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பாஜக…