ரெங்கா…முழக்கத்தில் மிதந்து வந்த தேர்..!ஸ்ரீரங்கத்தில் தை தேரோட்டம் வெகுச்சிறப்பு..

Default Image

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேர் திருவிழா வெகுச்சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேர் திருவிழா நிகழ்வானது கடந்த 30ந்தேதி கொடியேற்றத்தோடு  தொடங்கியது. இவ்விழாவின் 4ம் நாளான பிப்., 2ந்தேதி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள் முக்கிய வீதிகள் வழியாக உத்தர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்காட்சி அளித்தார்.

Image result for ஸ்ரீரங்கம் தை தேரோட்டம்

8ம் நாளான நேற்று முன்தினம் மாலையில் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு உத்தர வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டு அருளினார்.இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஆனது நேற்று  நடைபெற்றது.ரெங்கா..ரெங்கா..நாராயணா..கோவிந்தா..போன்ற நாம முழக்கங்களை எழுப்பிய வாரே தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.

Image result for ஸ்ரீரங்கம் தை தேரோட்டம்

இந்நிகழ்விற்காக நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 4.30 மணிக்கு எல்லாம் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தை தேர் மண்டபத்திற்கு சரியாக 5.15 மணிக்கு வந்தார். 5.15 மணிமுதல் 5.45 மணிவரை தனுர் லக்னத்தில் ரதரோஹணம் நிகழ்ச்சியானது நடைபெற்றது.நிறைவு நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு மாலை 3.30 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வந்தடைகிறார். அங்கிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு வாகன மண்டபம் செல்கிறார். வாகன மண்டபத்தில் இருந்து இரவு 8 மணிக்கு நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் புறப்பட்டு நான்கு உத்தர வீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு வாகன மண்டபத்திற்கு மீண்டும் வந்தடையும் அற்புதமாக நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்