ஸ்புட்னிக்-வி தடுப்பூசி டெல்டா கொரோனாவுக்கு 83% செயல்திறன் திறன் கொண்டது – ரஷியா..!
ஸ்புட்னிக்-வி தடுப்பூசி டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக 83% செயல்திறன் திறன் கொண்டது என்று ரஷிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசை தடுக்க பல நாடுகள் தடுப்பூசியை உருவாக்கி வருகிறது. இந்நிலையில், ரஷியாவின் ஸ்புட்னிக்-வி என்ற கொரோனா தடுப்பூசி பல கட்ட சோதனை செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மக்கள் பயன்பாட்டில் தற்போது உள்ளது.
இந்த தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தபோதும் பரிசோதனை முடிவுகளையும் ரஷியா வெளியிட்டு வருகிறது. இதையெடுத்து, ஸ்புட்னிக் வி-ன் மேலும் ஒரு பரிசோதனை முடிவுகளை குறித்து ரஷ்யா அறிவித்துள்ளது. தற்போது கொரோனா உருமாற்றம் அடைந்து டெல்டா, டெல்டா பிளஸ் என வீரியமாக மக்களை பாதித்து வருகிறது.
அந்த வகையில் ரஷ்ய சுகாதாரத்துறை மந்திரி மிக்கெல் முரஷ்கோ தெரிவித்துள்ளதாவது, ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக 83 சதவீதம் செயல்திறன் உடையது. மேலும், நாங்கள் எதிர்பார்த்ததை விட ஸ்புட்னிக்-வி தடுப்பூசி குறைந்த செயல்திறன் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.