ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி சிறிய பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்-ரஷ்ய சுகாதார அமைச்சர்..!
கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான ரஷ்யாவின் தடுப்பூசியான ஸ்பூட்னிக் வி ஊசி செலுத்திய பின்னர் ஏழு தன்னார்வலர்களில் ஒருவருக்கு பக்கவிளைவுகள் இருப்பதாக ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ தெரிவித்துள்ளார்.
ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ, அறிவிக்கப்பட்ட 40,000 தன்னார்வலர்களில் 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு இதுவரை ஸ்பூட்னிக் வி தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அரசு நடத்தும் டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏறத்தாழ 14% பேருக்கு 24 மணி நேரத்தில் தசை வலி மற்றும் அவ்வப்போது உடல் வெப்பநிலை அதிகரிப்பது போன்ற சிறிய பக்கவிளைவுகளை கொண்டுள்ளனர் என்று முராஷ்கோ மேற்கோளிட்டுள்ளார். கொரோனா வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அடைவதில் 100 சதவீதம் வெற்றி கிடைத்ததாகவும் முராஷ்கோ கூறினார்.
முதல் டோஸின் 21 நாட்களுக்குள் தன்னார்வலர்கள் தடுப்பூசியின் இரண்டாவது ஷாட்டைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பூட்னிக் வி இன்னும் பெரிய அளவிலான மருத்துவ பரிசோதனைகளை முடிக்கவில்லை, ஆனால், கடந்த மாதம் ரஷ்ய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது.
ஸ்பட்னிக் வி தடுப்பூசியின் இறுதி மருத்துவ பரிசோதனைகள் இந்த மாத தொடக்கத்தில் மாஸ்கோவில் தொடங்கியது. இந்த தடுப்பூசி நவம்பர் பிற்பகுதியில் அல்லது டிசம்பர் தொடக்கத்தில் பொதுமக்களுக்கு கிடைக்கும். மூன்றாம் கட்ட சோதனை முடிந்ததும் தடுப்பூசி விநியோகிக்கப்படும்.
இந்தியாவில் ஒழுங்குமுறை ஒப்புதல் கிடைத்தவுடன் கொரோனாவுக்கு எதிராக இந்தியாவின் டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களுக்கு 100 மில்லியன் டோஸ் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி வழங்கப்படும் என்று ரஷியாவின் நேரடி முதலீட்டு நிதியம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.