2018 தமிழக பட்ஜெட்:ரூ.191.18 கோடி விளையாட்டுத் துறை,இளைஞர் நலனுக்கு ஒதுக்கீடு!
ரூ.191.18 கோடி இளைஞர் நலன், விளையாட்டுத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பட்ஜெட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் உயிரி இயந்திரவியல் சிறப்பு மையத்துக்கு ரூ.13.12 கோடி வழங்கப்படும் என கூறினார்.துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக அரசின் வருவாய் ரூ. 1.81 லட்சம் கோடி,செலவு ரூ. 2. 04 லட்சம் கோடி, பற்றாக்குறை ரூ. 23 ஆயிரத்து 176 கோடி என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.