ஆஸ்திரேலியாவில் சில கிலோ மீட்டர் தூரத்திற்கு சிலந்திகள் பிண்ணிய வலையை பார்த்து அச்சத்தில் உறைந்த மக்கள்.
ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாகாணத்தில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கனமழை பெய்து, பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அந்த பகுதிகளில் வெள்ளங்கள் முற்றிலும் வடிந்த நிலையில், கிப்ஸ்லாந்தின் பல பகுதிகளில்சிலந்தி வலைகள் போர்வை போல காணப்படுகிறது.
சில கிலோ மீட்டர் தூரத்திற்கு சிலந்திகள் வலை பிண்ணியுள்ள நிலையில், இதைப் பார்க்கும்போது மெல்லிய பட்டாடை போல காட்சியளிக்கிறது. இதுகுறித்து, நிபுணர்கள் கூறுகையில், சிலந்திகள் எந்தத் தீங்கும் செய்யாது, அதே நேரத்தில் உள்ளூர்வாசிகள் இந்த நிகழ்வை ‘சிலந்தி அபொகாலிப்ஸ்’ என்று அழைக்கிறார்கள் என தெரிவித்துள்ளனர்.
மேலும், உள்ளூர் ஆய்வாளர்கள் கூறுகையில், சிலந்திகள் வெள்ளத்தால் தண்ணீருக்குள் மூழ்காமல் இருப்பதற்காக ஆயிரக்கணக்கான சிலந்திகள் இணைந்து இதை கட்டி இருப்பதாகவும், குளிர்ந்த சூழலில் இருந்து தங்களை காத்துக் கொள்வதற்காகவும் இவ்வாறு வலை பிண்ணியிருப்பதாக தெரிவித்துள்ளனர். மக்களை பயமுறுத்தும் வகையில் உள்ள இந்த சிலந்தி வலைகளின் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹைதராபாத் : லக்னோ அணி பலம் வாய்ந்த அணியான ஹைதராபாத் அணியை நேற்று வீழ்த்திய நிலையில் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்…
டெல்லி : தாய்லாந்து, மியான்மரில் சக்தி வாய்ந்த லநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இது ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவானதாக தகவல்…
பாங்காக் : மியான்மரை தொடர்ந்து தாய்லாந்திலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மியான்மரில் இன்று காலை 11:50 மணியளவில் முதல் சக்தி…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில்…
சென்னை : இன்று (மார்ச் 28) தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்று…