நடிகர் சோனு சூட்டிற்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் கவுரவம்!
நடிகர் சோனு சூட்டை சிறப்பிக்கும் விதமாக அவரது புகைப்படத்தை தங்களது விமானத்தில் ஒட்டிய ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது . இந்த ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாமல் வருமானமின்றி தவித்தனர். மக்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்து. மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை பல பிரபல நடிகர்கள் செய்து வந்தனர். அந்த வகையில் குறிப்பாக நடிகர் சோனு சூட் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல பஸ் வசதி மற்றும் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்கிக் கொடுக்கவும் ஏழைகளுக்கு உதவி செய்வது என பல உதவிகளை மக்களுக்கு செய்து வந்தார்.
வெளிநாடுகளில் சிக்கிக் கொண்ட மாணவ மாணவிகளை கூட விமானம் மூலம் அழைத்து வந்தார் அப்போது அவருக்கு தனியார் விமான நிறுவனம், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் உறுதுணையாக இருந்தது.
இந்த நிலையில் கொரோனா காலத்தில் பல்வேறு தரப்பினருக்கும் உதவிய நடிகர் சோனு சூட்டை சிறப்பிக்கும் விதமாக ஜெட் நிறுவனம் தனது 727 விமானங்களில் ஒரு விமானத்தில் மட்டும் சோனு சூட் போஸ்டரை ஒட்டி சிறப்பித்துள்ளது. மேலும் தங்களுக்கும், பலருக்கும், சோனு சூட் முன்னுதாரணம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
Special livery dedicated to @SonuSood by @flyspicejet. Just amazing and richly deserved ???????? #SonuSood #SonuSoodRealHero pic.twitter.com/a4ow8jfBqL
— Kaushik LM (@LMKMovieManiac) March 20, 2021