தீபாவளிக்கு வெளியான திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகள் கிடையாது என அறிவிக்கப்பட்டு, பின்னர் படக்குழுவினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது.
சிறப்பு காட்சிகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்க படுவதாக எழுந்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த விவகாரம் தொடர்பாக தற்போது தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு தனது டிவிட்டர் பக்கத்தில் ‘அதிக டிக்கெட் விலை, ஒரு காட்சிக்கு அனுமதி வாங்கிவிட்டு 2,3 காட்சிகளை திரையிடுகிறார்கள்” என்ற தொடர் குற்றச்சாட்டுகளால்தான் தீபாவளிக்கு சிறப்புக்காட்சிக்கு அனுமதி இல்லையென கூறினோம். பின் பொதுமக்கள், ரசிகர்களின் கோரிக்கைக்கிணங்க ஒரு காட்சிக்கு மட்டும் ஒரு நாள் அனுமதி அளித்தோம். ‘ என கூறியிருந்தார்.
மேலும், ‘ இனிமேல் சிறப்புக்காட்சிகளுக்கு அரசே ஒரு கட்டணத்தை நிர்ணயித்து, அது வெளிப்படையாக மக்களுக்கும் தெரிவிக்கப்பட்டு அந்த கட்டணத்தை தான் வாங்க வேண்டுமென கூறியிருக்கின்றோம்.’ எனவும் பதிவிட்டுள்ளார்.
இதனால், இனி சிறப்பு காட்சிகளுக்கும் அரசே கட்டத்தை நிர்ணயம் செய்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…