உக்ரைனுக்கு சிறப்பு ராணுவ உபகரணங்கள் வழங்கப்படும் – கனடா பிரதமர்
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 14 நாட்களாக போர் நடந்து வருகிறது. இந்த போரின் மத்தியில் லட்சக்கணக்கான உக்ரைன் குடிமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். உக்ரைனில் நடந்த போரில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
உலக நாடுகள் உக்ரைன் மீது நடத்தப்படும் தாக்குதலை நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு வேண்டுகோள் விடுத்தது வருகின்றனர். இருப்பினும் ரஷ்யா போர் தொடுத்து தான் வருகிறது. இந்த நிலையில், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிபர் செலன்ஸ்கியிடம் பேசியுள்ளார்.
இந்த உரையாடலின் போது, ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் மற்றும் மனிதாபிமான உதவிகள் குறித்தும் செலன்ஸ்கியிடம் உரையாடியுள்ளார். கனடாவின் பாராளுமன்றத்தில் உரையாற்ற உக்ரைன் அதிபர் செலன்ஸ்கிக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.