நாளை காணும் பொங்கலளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
நாளை அண்ணாசதுக்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா, கோவளம், மாமல்லபுரம், கிஷ்கிந்தா, குயின்ஸ்லேண்ட், பெசன்ட்நகர், பிராட்வே, தாம்பரம், திருவான்மியூர், மற்றும் தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சி ஆகிய இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கபடவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, புறநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு இடங்களில் இருந்து இந்தப் பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை முடிந்து தென் மாவட்டங்களில் இருந்து திரும்புவோரின் வசதிக்காக நாளை மறுநாள் அதிகாலை 3.30 மணி முதல் சென்னை புறநகர் பேருந்து நிலையம், பெருங்களத்தூர், மற்றும் செண்ட்ரல் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.