சில தினங்களுக்கு முன் இருந்ததை விட எஸ்.பி.பி. சுவாசிப்பதில் சிரமம் குறைந்துள்ளதாக மகன் சரண் தெரிவிப்பு.
பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு கடந்த 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதியாகி சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார். 2 நாட்களில் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பி விடுவேன் என்று அவர் கூறியிருந்த நிலையில் இதையடுத்து, கடந்த 13-ம் தேதி அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
எஸ்.பி. பாலசுப்பிரமணியனை மருத்துவர்கள் தீவிர கவனித்து வருகின்றனர். உடல்நலம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது. இதற்கிடையில் அவர் விரைவில் குணமடைந்து மீண்டு வர திரையுலகினர் மட்டுமின்றி பலரும் தங்களது பிரார்த்தனைகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று அவரது மகன் எஸ்.பி.பி சரண் கூறுகையில், எனது தந்தை எஸ்.பி.பி. மெல்ல மெல்ல தேறி வருகிறதாகவும், முன்பு விட தற்போது தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது என தெரிவித்தார்.
இதற்கிடையில் இன்று மகன் சரண் பேசிய ஒரு வீடியோ ஒன்று வெளியகியுள்ளது. அதில் அவர் பேசுகையில், அப்பா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் சில தினங்களுக்கு முன்பு இருந்ததை விட எஸ்.பி.பி. சுவாசிப்பதில் சிரமம் குறைந்துள்ளது, கண் விழித்து மருத்துவரிடம் கை சைகை செய்தார் என கூறினார். மேலும் அவர் கூறுகையில், அம்மாவும் குணமாகி வருகிறார்கள் ஓரிரு நாட்களில் நலம் பெறுவார் என்று தெரிவித்துள்ளார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…