அப்பா நலமுடன் இருக்கிறார். அவர் தன்னை அடையாளம் கண்டுகொண்டார். அவரிடம் சில வார்த்தைகள் பேசினேன். இரண்டு வாரங்களுக்கு பிறகு அவரை சந்தித்து பேசியதில் மகிழ்ச்சி. – எஸ்.பி.பி மகன் சரண் மகிழ்ச்சி.
திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். இவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், இருந்தும் இவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து வருகிறது. வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், எஸ்.பிபி மகன் சரண் சிகிச்சையில் உள்ள தன் தந்தையை கண்டு பேசியதாக அண்மையில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ‘ அப்பா நலமுடன் இருக்கிறார். அவர் தன்னை அடையாளம் கண்டுகொண்டார். அவரிடம் சில வார்த்தைகள் பேசினேன். இரண்டு வாரங்களுக்கு பிறகு அவரை சந்தித்து பேசியதில் மகிழ்ச்சி. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அறையில் இசை ஒலிபரப்பப்பட்டது. அதனை அவர் ரசித்தார். மேலும் தனது தாய் குறித்தும் சைகையில் விசாரித்தார்.’ என கூறியுள்ளார்.
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வார தொடக்க நாளான இன்று (மார்ச் 17) சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.…
சென்னை : அண்மையில் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
சென்னை : சில தினங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில்…
விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்…