வரலாற்றில் இன்று(20.03.2020)… சின்னஞ்சிறிய சிட்டுகளான சிட்டுக்குருவிகள் தினம்…

Default Image

சிட்டுக்குருவி முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும்  பறவையினத்தைச் சேர்ந்தது ஆகும். இவை பசரீங்கள் குடும்பத்தைச் சார்ந்தவையாகும். தமிழகத்தில் இவை அடைக்கலக்குருவி, வீட்டுக்குருவி, ஊர்க்குருவி, சிட்டுக்குருவி என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த சிட்டுக்குருவிகள் குறித்த சிறப்பு தொகுப்பு..

உடல் அமைப்பு

  • சிட்டுக் குருவிகள் உருவத்தில் மிகவும்  சிறியனவாகவும், இளம் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தி்லும் இருக்கும். இதற்கு,
  •   சிறிய அலகு,
  • சிறிய கால்களுடன்காணப்படும்.
  • இவை 8 முதல் 24 செ.மீ நீளமுள்ளவை.
  • பழுப்பு சாம்பல், மங்கலான வெள்ளை என்று பல நிறங்களில் காணப்படும்.
  • கூம்பு வடிவ அலகுகளைப் பெற்ற இவை 27 முதல் 39 கிராம் எடை கொண்டவை.
  • ஆண் பறவையில் இருந்து பெண் பறவை வேறுபட்டது.
  • அடிப்பாகம் வெளுப்பாக இருக்கும்

வசிப்பிடம்

இந்த சிட்டுக்குருவிகள் உலகில்,

  • ஆசியா,
  •  ஐரோப்பா, 
  • ஆப்பிரிக்கா,
  • அமெரிக்கா போன்ற பல நாடுகளில் குருவி இனங்கள் உள்ளன.  இந்த சிட்டுக் குருவிகளின் வாழ்நாள் சுமார் 13 ஆண்டுகளாகும். சிட்டுக்குருவிகள் மனிதர்கள் இருக்கும் பகுதிகளிலேயே வசித்தாலும் மனிதர்களோடு பழகுவதில்லை.  வீடுகளின் மறைவான இடங்களிலும் வைக்கோல், புல்  போன்ற மெல்லிய பொருட்களைக் கொண்டும்கூடு கட்டி வசிக்கின்றன . இவற்றின் கூடுகள் கிண்ண வடிவில் இருக்கும். இவை குளிர் காலத்தில் கூட்டமாக ஒரு புதரில் ஒன்று சேர்ந்து இரவைக் கழிக்கின்றன.

உணவுப் பழக்கம்

இந்த சிட்டுக் குருவிகள் ஓர்,  அனைத்துண்ணிகள் ஆகும்,  இவை

  • தானியங்களையும், 
  • புழு,
  •  பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும்
  • சில வகைக் குருவிகள் பூ மொட்டுகளையும் உண்ணும்.
 

வாழ்க்கைமுறை

சிட்டுக் குருவிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து தங்கள் இனத்தை பெருக்கிக்கொள்கின்றனர். இவை,  மூன்று முதல் ஐந்து முட்டைகள் வரை இடும்.  இந்த முட்டைகள் பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும். பெண் பறவைகள் மட்டுமே அடைகாக்கும் பறவை இனத்தில் இது மட்டும் விதிவிலக்காக  ஆண்,  பெண் இரண்டுமே முட்டைகளையும், இளம் உயிரிகளையும் பாதுகாத்து வளர்க்கின்றன. இப்படி பொறிக்கப்பட்ட குஞ்சுகள் பெரிதாகும் வரை கூட்டிலேயே வளர்கின்றன; பறக்கத் தொடங்கியவுடன் தனியே பிரிந்து விடுகின்றன.

அழிந்து  வரும் உயிரி

மரங்களை வெட்டுவதாலும், உலகம்வெப்பமயமாகி இயற்கைப் பேரழிவுகள் நேர்கின்றன. தற்போது பல நகர்ப்புறங்களில் சிட்டுக்குருவிகள் முற்றிலுமாக அழிந்துவிட்டன அலைபேசியில்இருந்து வெளிவரும் (நுண்ணலைகள்)மின்காந்த அலைகளின் தாக்கம் இந்த குருவியினத்தின் இனபெருக்க மண்டலத்தை தாக்கி அவற்றை மலடாக மாற்றி விடுவதனால் இவற்றால் தங்களின் இனத்தை பெருக்க இயலவில்லை என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சிட்டுக் குருவி இனத்தை அழியாமல் காக்க வேண்டும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் போராடி  வருகிறார்கள். எனவே மார்ச் 20 ஆம் தேதியை உலக சிட்டுக்குருவிகள் தினமாகக்கொண்டாடி அவற்றைக் காக்கப் தற்போது வரை போராடி வருகின்றனர். இதனை உணர்த்தும் வகையில் பல நாடுகள் அஞ்சல் தலைகள் வெளியிட்டுப்  சிட்டுக்குருவிகளை பெருமைப் படுத்தியுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்