வெடித்து சிதறிய ராக்கெட் ! ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் கனவு திட்டத்திற்கு பின்னடைவு
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் கனவு திட்டமான செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப மேற்கொண்ட சோதனை முயற்சி தோல்வியை அடைந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் கனவு திட்டம் செவ்வாய் கிரகத்துக்கும் மனிதர்களை அனுப்ப வேண்டும் என்பது ஆகும்.இந்த திட்டத்தை மேற்கொள்ள உருவாக்கப்பட்டது தான் ஸ்டார் ஷிப் ராக்கெட்டுகள்.
ஸ்டார் ஷிப் எஸ்என் 8 ( Starship SN8) என்ற அழைக்கப்படும் இந்த ஸ்டார் ஷிப் புரோட்டோ ராக்கெட்டுகள் சுமார் 100 டன் சரக்குகளை கொண்டு செல்லும்.இந்த ராக்கெட்டில் மூன்று என்ஜின்கள் உள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள போகா சிகா கடற்கரை பகுதியிலிருந்து இந்த ராக்கெட்டின் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.அப்பொழுது ராக்கெட் தரையிறங்கியபோது வெடித்து சிதறியது.விண்வெளிக்கு சென்று திரும்பி வரும்போது தொழில்நுட்பக்கோளாறு காரணமாக ராக்கெட் வெடித்து சிதறியது. சுமார் 8 கிலோமீட்டர் தூரம் மட்டும் பறந்த இந்த ராக்கெட்டின் மூன்று என்ஜின்களும் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியது.இந்த சோதனை முயற்சி வெற்றியடைந்திருந்தால் , செவ்வாய்கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டது.ஆனால் சோதனை முயற்சி தற்போது தோல்வி அடைந்துள்ளது .இது குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மாஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,ராக்கெட் ஏறியது வெற்றிகரமாக இருந்தது.தரையிறங்கும் போது எரிபொருள் அழுத்தம் குறைவாக இருந்தது, இதனால் டச் டவுன் வேகம் அதிகமாக ஆக இருந்தது என்று குறிப்பிட்ட அவர் ,எங்களுக்கு தேவையான எல்லா தரவும் கிடைத்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
Fuel header tank pressure was low during landing burn, causing touchdown velocity to be high & RUD, but we got all the data we needed! Congrats SpaceX team hell yeah!!
— Elon Musk (@elonmusk) December 9, 2020