மீண்டும் சாதித்த எலான் மஸ்க்.. 4 பேருடன் விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்!
தனியார் நிறுவனமாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் “பால்கன் 9” ரக ராக்கெட் மூலம் 4 விண்வெளி வீரர்களை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தனர்.
தனியார் நிறுவனமாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை நாசா தொடங்கியது. அதன்படி கடந்த மே மாதம், நாசா விண்வெளி வீரர்களான பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லியை ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பினார்கள். அந்த சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்தது. மேலும், அவர்களின் ஆராய்ச்சியை முடித்துவிட்டு, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் கேப்சூல் மூலம் பூமிக்கு திரும்பி வந்தார்கள்.
இதனைதொடர்ந்து நாசா 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்ப திட்டமிட்டனர். அதன்படி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், “க்ரு ட்ராகன்” எனும் விண்கலத்துடன் “பால்கன் 9” ரக ராக்கெட்டை தயாரித்துள்ளது. இந்த விண்கலம் மூலம் ஜப்பான் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளை சார்ந்த 4 வீரர்கள் இந்த ராக்கெட்டில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ராக்கெட், இந்திய நேரப்படி சரியாக 5.57 AM-க்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. அந்த விடியோவை நாசா, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Resilience rises. ????
The Crew-1 mission has lifted off on a Falcon 9 rocket from @NASAKennedy at 7:27pm ET and is en route to the @Space_Station. #LaunchAmerica pic.twitter.com/5Q3uXSLvqt
— NASA (@NASA) November 16, 2020
இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டதை அமெரிக்க துணை அதிபர் மைப்ஃபேன்ஸ் நேரில் வந்து பார்வையிட்டார். 27 மணி நேர பயணத்திற்கு பின் இந்த க்ரு ட்ராகன் விண்கலம், நாளை சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடையும். அங்கு வீரர்கள், 6 மாதங்களாக தங்களின் ஆராய்ச்சியை மேற்கொள்வார்கள் என கூறப்படுகிறது. 4 பேரை சுமந்துகொண்டு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜோ பைடன் மற்றும் உலக தலைவர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
The crew is go for launch pic.twitter.com/HqJGin0gg7
— SpaceX (@SpaceX) November 16, 2020