அமெரிக்காவில் சீன விண்வெளி நிலையம் எரிந்து விழும் எனக் கணிப்பு!
ஆய்வாளர்கள் கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி மையம் டியாங்காங் 1 ஏப்ரல் மூன்றாம் தேதி அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் விழுந்து நொறுங்கும் என கணித்துள்ளனர்.
சீனாவின் விண்வெளி நிலையமான டியாங்காங் 2011ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்வெளி நிலையம் 2016ஆம் ஆண்டில் இருந்து கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டுச் சுற்றித் திரிகிறது. இதற்கிடையில் இரவில் வானை உற்றுநோக்குபவர்கள் இந்த விண்வெளி நிலையத்தைக் கண்டதாகக் கூறி அதன் படத்தையும் வெளியிட்டுள்ளனர். எட்டரை டன் எடையுள்ள இந்த விண்வெளி நிலையம் ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி வாக்கில் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் விழும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். புவியின் வளிமண்டலத்துக்குள் நுழையும்போது காற்றின் உராய்வு காரணமாக தீப்பற்றும் என்பதால் எரிந்த நிலையில் அதன் சிதைவுகள் தான் புவியில் விழும் எனக் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.