வணிக ரீதியிலான விண்வெளி பயணம்.! ஸ்பேஸ் எக்ஸ்ஸின் அதிரடி திட்டம்.!
கடந்த மே மாதம் ராபர்ட் எல். பெஹன்கென் மற்றும் டக்ளஸ் ஜி. ஹர்லி ஆகியோர் வணிக ரீதியிலான விண்வெளி பயணத்திற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் விண்ணிற்கு அனுப்பபட்டு இன்று பூமிக்கு திருமப உள்ளனர்.
எலான் மஸ்க் உருவாக்கிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது, வணிக ரீதியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதை நோக்கமாக கொண்டு, கடந்த மே மாதம் ராபர்ட் எல். பெஹன்கென் மற்றும் டக்ளஸ் ஜி. ஹர்லி ஆகியோரை விண்வெளிக்கு அனுப்பியது.
அவர்கள் சனிக்கிழமை இரவு சுமார் 7.30 மணியளவில் விண்ணில் இருந்து புறப்பட்டனர். இங்கு வானிலை சரியாக அமைந்தால் அவர்கள் ஞாயிற்று கிழமை பூமியில் தரையிறங்குவர் என கூறப்பட்டது.
இந்த பயணம் சரியாக அமைந்தால், அடுத்தடுத்து, வணிக ரீதியிலான பயணங்கள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ராபர்ட் எல். பெஹன்கென் மற்றும் டக்ளஸ் ஜி. ஹர்லி ஆகியோரை பத்திரமாக தரையிறக்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.