விண்வெளியில் அதிக நாள் தங்கி அமெரிக்க பெண் இமாலய சாதனை..பிப்ரவரி மாதம் மீண்டும் பூமிக்கு திரும்புகிறார்..

Default Image
  • அமெரிக்கா, ரஷியா,சீன,கனடா  உள்பட 13 நாடுகள் இணைந்து பூமிக்கு வெளியே சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்துள்ளன.
  • இதில் அதிக நாட்கள் தங்கி சாதனை புரிந்த பெண் பிப்ரவரியில் பூமிக்கு திரும்புகிறார்.

இந்த வின்வெளி ஆய்வு  மையத்தில் ஆறு வீரர்கள் தங்கி தொடர்ந்து ஆராய்ச்சிகளை  மேற்கொண்டு வருகின்றனர். இவர்களில் 3 பேர் ஆறு மாதங்கள்  தங்கிவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்புவார்கள். அதன்பின் புதிதாக 3 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.இந்நிலையில்,  அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டீனா கோச் என்ற விண்வெளி வீராங்கனை கடந்த  ஜூலை மாதம் 20ம் தேதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றார். அவர் இன்றுடன் அதாவது சனிக்கிழமை வரை இவர்  சர்வதேச விண்வெளி நிலையத்தில் இதுவரை 288 நாட்கள் தங்கி தற்போது  சாதனை படைத்துள்ளார். மேலும் இவர், 4 முறை விண்வெளியில் நடந்து உள்ளார்.இதேபோல்,  கடந்த  அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி முதல்  தனது சக ஊழியரும் சிறந்த நண்பருமான ஜெசிகா மீருடன்  விண் வெளியில் நடந்து இருவரும் உலகின் தலைப்பு செய்தியானார்கள்.சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே ஏழு மணி நேரத்திற்கும் மேலான பயணத்தில், பெண்கள் இருவரும் வெண்வெளி நிலையத்தின்  சூரிய வலையமைப்பிற்கு கூடுதலாக உடைந்த மின் கட்டுப்படுத்தியை சரிசெய்யும் பணியை வெற்றிகரமாக முடித்தனர்..பிப்ரவரி 6, 2020 இல் கிறிஸ்டீனா கோச் பூமிக்குத் திரும்புகிறார்,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்