வதந்தி : S.P.பாலசுப்ரமணியம் விளக்கம்
உடல்நிலை சரியில்லை என வதந்தி பரவியதைத் தொடர்ந்து பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வீடியோ வடிவில் விளக்கமளித்துள்ளார்.
இந்தியத் திரையுலகின் முன்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். பாடகர், இசையமைப்பு, நடிப்பு, மேடை கச்சேரி என பன்முகத் திறன் கொண்டவர். சில நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தன்னுடைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த வதந்தி சர்ச்சைக் குறித்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
எனக்கு உடல்நிலை சரியில்லையா எனக் கேட்டு உலகம் முழுவதிலுமிருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. தொடர்ச்சியாக சமூகவலைதளத்தில் உடல்நிலை சரியில்லை என்று வதந்திகள் பரவி வருவதைப் பார்க்கையில் வருத்தமாக இருக்கிறது.
நான் நலமுடன் இருக்கிறேன். சளி, இருமல் என மருத்துவமனைக்கு செல்வதை யாராவது பார்த்தாலும் தீவிர பாதிப்பு என்றும், பாடல் வாய்ப்புகளை ரத்து செய்துவிடுகிறார் என்று தவறான தகவல்களை பரப்புகிறார்கள். அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
நிஜத்தில் சில தினங்களுக்கு முன்பு என் சகோதரி இறந்துவிட்டார். ஆகையால், என்னால் வெளியே எங்கும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதற்காக மட்டுமே நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளேன்
இவ்வாறு எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.