வடகொரியத் தலைவர்களுக்கு தென்கொரிய அதிபர் மாளிகையில் விருந்து!
தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்காக வந்துள்ள வடகொரியத் தலைவர்களுக்குத் தனது இல்லத்தில் விருந்தளித்துச் சிறப்பித்துள்ளார்.
தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே 1950ஆம் ஆண்டில் இருந்தே பகை நீடித்து வரும் நிலையில், தென்கொரியாவின் பியாங்சாங்கில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரிய அணியினர் பங்கேற்றுள்ளனர். வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னின் தங்கை கிம் யோ ஜாங், வடகொரிய நாடாளுமன்றத் தலைவர் கிம் யாங் நாம் ஆகியோர் இந்தக் குழுவினருக்குத் தலைமையேற்று அழைத்து வந்துள்ளனர். ஒலிம்பிக் போட்டித் தொடக்க விழாவில் இரு கொரியாவைச் சேர்ந்த குழுவினரும் ஒன்றாக ஒரு கொடியின்கீழ் அணிவகுத்துச் சென்று புதிய தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்நிலையில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், வடகொரியத் தலைவர்களைத் தன் அலுவலகத்துக்கு அழைத்துப் பேச்சு நடத்தினார். அதன்பின் அவர்களுக்கு மதிய விருந்தளித்தும் சிறப்பித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.