உலக நாடுகள் ஊரடங்கில் இருக்கும்போது தேர்தல் நடத்திய தென்கொரியா.!

Default Image

 உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸால் உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 லட்சத்தை நெருங்கியது.  மேலும் உயிரிழப்பு ஒரு லட்சத்திற்கு மேல் தாண்டியது.

கொரோனாவால்  உலக நாடுகள் ஊரடங்கை கடைபிடித்து வருகையில் தென்கொரியாவை மட்டும் திட்டமிட்டபடி பொதுத் தேர்தலை நடத்தி வருகிறது . வருகின்ற 15-ஆம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில் நேற்று  தேர்தல் தொடங்கியது.இந்த தேர்தல் இரண்டு நாள் நடைபெறும்.

இந்த தேர்தலுக்காக சுமார் 3,500 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இந்த தேர்தல் நடைபெற்றது. வாக்காளர் மூன்றடி இடைவெளி விட்டும் , அனைவரும் முககவசம் அணிந்து படியும்,  அனைவருக்கும் சனிடைசர் தரப்பட்டு கை சுத்தப்படுத்தப்பட்டு  பிறகு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

ஒவ்வொருவரின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். காய்ச்சல் அறிகுறி தெரிந்தால் உடனடியாக அவர்கள் பரிசோதனைக்கு அனுப்படுவர்கள். மேலும் கொரோனாவால் சிகிச்சை பெறுபவர்களுக்கு அவர்கள் தனிமைபடுத்தபட்ட பகுதியில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு , அங்கு அவர்களும் , மருத்துவர்களும் வாக்குகளை பதிவு செய்தனர்.

முதல் நாளில் 50 லட்சம் வாக்குகள் பதிவாகியது.சீனாவுக்கு பிறகு கோரோனா பாதிக்கப்பட்ட முதல் நாடு தென் கொரியா தான். ஆனால் கொரோனாவை ஆரம்பத்தில் அங்கு வேகமாக பரவினாலும் ,  பின்னர் மக்கள் பரிசோதனைக்கு அதிகமாக உட்படுத்தப்பட்டு  கொரோனாவை கட்டுப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்