சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளை குறிவைத்து தாக்கியுள்ள கொரோனா வைரஸ் நோயானது, தென்கொரியாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. இந்நிலையில் அந்த நாட்டு அரசு மேற்கொள்ளும் தீவிர நடவடிக்கை காரணமாக தினசரி பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நூற்றுக்கும் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்தவர்களால் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 508 பேர் பாதிக்கப்பட்டதாக தென் கொரிய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார். தற்போது வரை கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் 92 சதவீதம் பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும், எஞ்சிய எட்டு சதவீதம் பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கடந்த 1988ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டிக்காக சியோலில் கட்டப்பட்ட விளையாட்டு மைதானத்தை கொரோனா நோய் தடுப்புக்கான தற்காலிக பரிசோதனை மையமாக தென்கொரிய அரசு மாற்றியுள்ளது. சர்வதேச நாடுகளிலிருந்து திரும்புபவர்கள் ஆயிரம் பேருக்கு தினசரி அங்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகின்றன.
கடந்த மாதம் வரை அறிகுறி இருப்பவர்கள் மட்டுமே விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி தென் கொரிய அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனால் தற்போது நோய்த்தொற்று அதிகரித்து அதன் காரணமாக விமான நிலையத்தில் வந்திறங்கும் அனைவருக்கும் இந்த பரிசோதனையை செய்ய உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…