தெற்கு ஆசிய நாடுகள் தாக்க கூடும்…! குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஜப்பான்…!

Published by
லீனா

தெற்கு ஆசிய நாடுகள் ஜப்பான் குடிமக்களை தாக்கக்கூடும் என்று, ஜப்பானின் வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

நேற்று ஜப்பானின் வெளியுறவு அமைச்சகம் அதன் குடிமக்களை, ஆறு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள மத வசதிகள் மற்றும் கூட்டங்களில் இருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. தற்கொலை குண்டுவெடிப்பு போன்ற அபாயங்கள் அதிகரித்துள்ளன  என்று தகவல் கிடைத்ததாக அமைச்சகம் கூறியது. இந்த எச்சரிக்கை இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் உள்ள ஜப்பானிய குடிமக்களுக்கு பொருந்தும் என தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்தின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் டானி சங்க்ராட், எச்சரிக்கையின் தோற்றத்தை ஜப்பான் வெளியிடவில்லை என்றும், “தாய்லாந்துக்கு குறிப்பிட்டது அல்ல” என்று சொல்வதைத் தவிர வேறு விவரங்கள் ஜப்பானிய தூதரகத்திடம் இல்லை என்றும் கூறினார்.

பிலிப்பைன்ஸ் வெளியுறவுத் துறை, அச்சுறுத்தல் நிலை பற்றி எந்த தகவலும் தெரியாது என்று சொன்னது, இந்தோனேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் டீக்கு பைசாஸ்யா ஜப்பானிய குடிமக்களுக்கு எந்த எச்சரிக்கையும் அனுப்பப்படவில்லை என்று மறுத்தார்.

மலேசிய காவல்துறையினருக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்று தேசிய போலீஸ் தலைவர் அக்ரில் சனி அப்துல்லா சானி கூறினார்.

ஜப்பான் தனது குடிமக்களை உள்ளூர் செய்திகள் மற்றும் தகவல்களுக்கு கவனம் செலுத்த வேண்டும் என்றும் “இப்போதைக்கு” எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது. ஜப்பானின் வெளியுறவு அமைச்சகம், தகவலின் ஆதாரத்தை வழங்க மறுத்தது. அது மற்ற நாடுகளுடன் பகிரப்பட்டதா என்றும் கூற மறுத்துள்ளது.

Recent Posts

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

26 seconds ago

“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!

ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…

43 minutes ago

டெல்லியில் பாஜக வெற்றி! மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற  டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…

53 minutes ago

ஈரோடு : நாதக பெற்ற வாக்குகள் விபத்துக்கு சமம்..திமுக வேட்பாளர் சந்திரகுமார் பேச்சு!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8…

2 hours ago

கெஜ்ரிவாலை வீழ்த்தியவருக்கு டெல்லி முதலமைச்சர் பதவி? பாஜகவின் திட்டம் என்ன?

டெல்லி : டெல்லி சட்டப்பேரைவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை, வெற்றி என பதிவு செய்து வருகிறது. இதனால்,…

2 hours ago

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆறுதல் வெற்றி! சாதித்த டெல்லி முதலமைச்சர் அதிஷி!

டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…

3 hours ago