தெற்கு ஆசிய நாடுகள் தாக்க கூடும்…! குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஜப்பான்…!
தெற்கு ஆசிய நாடுகள் ஜப்பான் குடிமக்களை தாக்கக்கூடும் என்று, ஜப்பானின் வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று ஜப்பானின் வெளியுறவு அமைச்சகம் அதன் குடிமக்களை, ஆறு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள மத வசதிகள் மற்றும் கூட்டங்களில் இருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. தற்கொலை குண்டுவெடிப்பு போன்ற அபாயங்கள் அதிகரித்துள்ளன என்று தகவல் கிடைத்ததாக அமைச்சகம் கூறியது. இந்த எச்சரிக்கை இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் உள்ள ஜப்பானிய குடிமக்களுக்கு பொருந்தும் என தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்தின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் டானி சங்க்ராட், எச்சரிக்கையின் தோற்றத்தை ஜப்பான் வெளியிடவில்லை என்றும், “தாய்லாந்துக்கு குறிப்பிட்டது அல்ல” என்று சொல்வதைத் தவிர வேறு விவரங்கள் ஜப்பானிய தூதரகத்திடம் இல்லை என்றும் கூறினார்.
பிலிப்பைன்ஸ் வெளியுறவுத் துறை, அச்சுறுத்தல் நிலை பற்றி எந்த தகவலும் தெரியாது என்று சொன்னது, இந்தோனேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் டீக்கு பைசாஸ்யா ஜப்பானிய குடிமக்களுக்கு எந்த எச்சரிக்கையும் அனுப்பப்படவில்லை என்று மறுத்தார்.
மலேசிய காவல்துறையினருக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்று தேசிய போலீஸ் தலைவர் அக்ரில் சனி அப்துல்லா சானி கூறினார்.
ஜப்பான் தனது குடிமக்களை உள்ளூர் செய்திகள் மற்றும் தகவல்களுக்கு கவனம் செலுத்த வேண்டும் என்றும் “இப்போதைக்கு” எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது. ஜப்பானின் வெளியுறவு அமைச்சகம், தகவலின் ஆதாரத்தை வழங்க மறுத்தது. அது மற்ற நாடுகளுடன் பகிரப்பட்டதா என்றும் கூற மறுத்துள்ளது.