தென் ஆப்பிரிக்காவில் லாரி மீது ரயில் மோதி விபத்து !18 பேர் உயிரிழப்பு…..
தென் ஆப்ரிக்காவில் லெவல் கிராசிங்கில் வந்த லாரியுடன் மோதியதில் ரயில் தடம் புரண்டு விபத்து .இதில் 18 பேர் உயிரிழந்தனர்
தென் ஆப்பிரிக்காவில் எலிசபெத் துறைமுகம்- ஜோகனஸ்பர்க் இடையே 700க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்த விரைவு ரயில் விபத்தில் சிக்கியது. இதில் 18 பேர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். லெவல் கிராசிங்கில் லாரி ஒன்றுடன் வேகமாக மோதிய ரயில் தடம்புரண்டதால் இந்த கோர விபத்து நேரிட்டது. இதனால் ரயிலின் ஓரிரு பெட்டிகளில் தீப்பிடித்து. சம்பவ இடத்தைப் பார்வையிட்ட போக்குவரத்து அமைச்சர் ஜோ மாஸவாங்கன்யி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
source: dinasuvadu.com