அக்டோபர் மாதம் 6ஆம் தேதி பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது போர் தொடுத்தனர் . ஹமாஸ் அமைப்பினர் நடத்திய முதற்கட்ட தாக்குதலில் இஸ்ரேலில் சுமார் 1,400 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் பிணை கைதிகளாக பலர் கடத்தி செல்லப்பட்டனர்.
அதனை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் பதில் தாக்குதலில் இதுவரை 21 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் காஸாவில் பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்துவருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், காசாவில் இனப்படுகொலை செயல்கள் நடைபெருவதாக இஸ்ரேலுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) நேற்று (வெள்ளிக்கிழமை) வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு தேதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
தென்னாப்பிரிக்காவின் குற்றச்சாட்டு இஸ்ரேல் ஒப்பந்தத்தின் கீழ் அதன் கடமைகளை மீறுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது ஒரு மக்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்க முயற்சிக்கும் குற்றமாகும்.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் : காஸா நகரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியது.!
இதற்கிடையில், இஸ்ரேல், குறிப்பாக அக்டோபர் 7, 2023 முதல், இனப்படுகொலையைத் தடுக்கத் தவறிவிட்டது. அது மட்டும் இல்லாமல், இனப்படுகொலைக்கான தூண்டுதலுக்கு எதிராக வழக்குத் தொடரத் தவறிவிட்டது” என்று DIRCO ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…