‘மன்னிக்கவும்..! எனக்கு மயக்கம் வருகிறது!’ – COVID – 19 தடுப்பூசியை போட்டுக் கொண்ட முதல் செவிலியர்!
டென்னசி, சட்டனூகாவில் உள்ள சி.எச்.ஐ மெமோரியல் மருத்துவமனையில், செவிலியர் மேலாளரான டிஃப்பனி பொன்டெஸ் டோவர் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.
டென்னசி, சட்டனூகாவில் உள்ள சி.எச்.ஐ மெமோரியல் மருத்துவமனையில், செவிலியர் மேலாளரான டிஃப்பனி பொன்டெஸ் டோவர் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டார். இவர் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட முதல் ஊழியர் ஆவார்.
செவிலியர் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரது உடல்நிலை சரியில்லாமல் போனதையடுத்து, ‘மன்னிக்கவும், எனக்கு மயக்கம் வருகிறது மன்னிக்கவும்’ என கூறியுள்ளார். அப்போது அவரை பிடிப்பதற்காக இரண்டு பேர் விரைந்துள்ளனர்.
பின்னர் அவர் குணமடைந்து கூறுகையில், வலியை உணரும்போது அடிக்கடி மயக்கம் வருவதாகக் கூறினார். அதனால் ஆச்சரியமில்லை. ‘இது திடீரென்று என்னைத் தாக்கியது. இப்போது எனக்கு நன்றாக இருக்கிறது. இது எனக்கு பொதுவானது.’ எனக் கூறியுள்ளார்.