இசைவிழா..கொண்டாட காத்திருக்கும் சூர்யா!!எங்கனு தெரியுமா..!
நடிகர் சூர்யா நடிப்பில் இந்தாண்டின் முதல் திரைப்படமாக வெளியாக உள்ளம் சூரறைப்போற்று படத்தின் இசைவிழா சென்னை விமானநிலையத்தில் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சுதா கொங்கொரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் சூரறைப்போற்று. இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் மற்றும் shikya Entertainment இணைந்து படத்தை தயாரித்து உள்ளது.
படத்தில் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, ஜாக்கி ஷ்ராஃப், மோகன் பாபு உள்ளிட்ட நடிகர்,நடிகைகள் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். ஒளிப்பதிவை நிகேத் பொம்மிரெட்டி செய்கிறார்.படத்தொகுப்பை சதீஸ்சூர்யா செய்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜீ.வி பிரகாஷ் இசையமைத்துஉள்ளார்.
படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில் படத்தின் இசை வெளியீட்டுக்காக படக்குழு புதுவிதமான முயற்சியில் இறங்கி உள்ளதாக தகல்கள் வெளியாகி உள்ளது.
படத்தின் ‘மாறா’ Theme music ஏற்கனவே வெளியான நிலையில் அடுத்த பாடல் விமான வெளியாக உள்ளது.இந்நிலையில் படத்தின் இசைவெளியீட்டு விழாவையும்,இந்த பாடலையும் ஒன்றாக விமான நிலையத்தில் நடத்த முயற்சிகள் நடந்துவருவதாக கூறப்படுகிறது.இதற்காக படக்குழு விமான நிலையத்தின் அனுமதியைப்பெற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.