சூரரைப் போற்று திரைப்படத்தின் டிரைலர் அப்டேட்…!
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் சூரரைப் போற்று இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். கருணாஸ், கவிதா, மோகன் பாபு போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இந்த திரைப்படம் ஆக்டோபர் மாதம் 30ம் தேதி அமேசான் பிரேமில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் ஒன்றை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் சூரரைப் போற்று படத்தின் பிஜிஎம் முடிவடைந்துள்ளதாகவும் படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என்று பதிவு செய்துள்ளார்.
Trailer very very soon ???????? #SooraraiPottru … BGScore done ????????
— G.V.Prakash Kumar (@gvprakash) October 3, 2020