விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பாடல் விரைவில் வெளியிட உள்ளதாக இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி.பலபடங்களை தனது கைவசம் வைத்துள்ள விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள படங்களில் ஒன்று மாமனிதன் . இந்த படத்தினை சீனு ராமசாமி இயக்கியுள்ளார்.இந்த திரைப்படம் சீனு ராமசாமி-விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள நான்காவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காய்த்ரி நடித்துள்ளார் .இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஏற்கனவே ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது .
இந்த படத்திற்கு இளையராஜா யுவன் சங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர்.யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2019-ம் ஆண்டே முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது.ஒரு சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் மாமனிதன் படத்தினை குறித்த அப்டேட்டை இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதாவது மாமனிதன் தலைப்பு ஏற்கனவே தயாரிப்பாளர் திரு.ஜெயசீலன் என்பவரிடமிருந்து முறைப்படி திரு.யுவன் சங்கர் ராஜா இரண்டு நாட்களுக்கு முன்பு பெற்றார் .ஆகவே மாமனிதன் படத்தின் தலைப்பு எங்கள் படத்திற்கு உறுதியானது.தலைப்பு பெற்றதால் பர்ஸ்ட் லுக்,பாடல் விரைவில் என்று குறிப்பிட்டுள்ளார்.இது விஜய் சேதுபதி ரசிகர்களைடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…