ரஷ்யாவில் தங்களது அனைத்து சேவைகளையும் நிறுத்துவதாக அறிவித்த பிரபல மியூசிக் நிறுவனம்!

Default Image

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது.இந்த போரின் மத்தியில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உக்ரைன் குடிமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர் உக்ரைனில் நடந்த போரில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையே சண்டை அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ரஷ்யா மீது மிகப்பெரிய நிறுவனங்கள் பொருளாதார தடையை விதிக்க தொடங்கியுள்ளன.அந்த வகையில், ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை அமெரிக்கா கடுமையாக்கியுள்ளது.ஸ்டார்பக்ஸ், கோக், பெப்சி ஆகியவையை தொடர்ந்து மற்றொரு அமெரிக்க நிறுவனமான மெக்டொனால்டு ரஷ்யாவில் உள்ள அனைத்து விற்பனை நிலையங்களையும் தற்காலிகமாக  மூடுவதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில்,ரஷ்யாவில் தங்களது அனைத்து சேவைகளையும் நிறுத்துவதாக பிரபல மியூசிக் நிறுவனமான சோனிமியூசிக் அறிவித்துள்ளது.

மேலும்,சோனி மியூசிக் குர்ராப் கூறுகையில்:”உக்ரைனில் அமைதி மற்றும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு விடுக்கிறது. நாங்கள் ரஷ்யாவில் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டோம்,மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ உலகளாவிய மனிதாபிமான நிவாரண முயற்சிகளுக்கு எங்கள் ஆதரவைத் தொடருவோம்”,என்று தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்