அரசியல்வாதிகளிடம் கூறி பயனில்லாத காரியத்தை சில மணி நேரங்களிலையே செய்த சோனு சூட்.! நன்றியை தெரிவிக்கும் ஊர் மக்கள்.!
ஜான்சி என்ற கிராமத்திற்கு தண்ணீர் வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளார் சோனு சூட்.
சினிமாவில் வில்லனாக நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் மக்கள் மனதில் ஹீரோவாக திகழ்பவர் சோனு சூட் .கொரோனா சூழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை தனது சொந்த செலவில் செய்து உதவியதுடன், ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு செல்லவும் உதவினார்.அதனுடன் வேலையில்லா பெண் ஒருவருக்கு வேலை , மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்,விவசாயி ஒருவருக்கு டிராக்டர் , மூன்று குழந்தைகளை தத்தெடுத்தது, மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன் உள்ளிட்ட பல உதவிகளை செய்துள்ளார் சோனு சூட்.அதனுடன் சமூக ஊடகங்கள் வாயிலாக தன்னிடம் உதவி கேட்பவருக்கும் தன்னால் இயன்ற உதவிகளையும் செய்து வருகின்றார்.
இந்த நிலையில் தற்போது ஜான்சி என்ற கிராமத்திற்கு தண்ணீர் வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளார் .அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் சோனு சூட்டிடம் தங்களது கிராமத்திற்கு தண்ணீர் வசதி இல்லை என்றும் ,அதனால் பல கிலோ மீட்டர் தாண்டி சென்று தான் தண்ணீர் எடுத்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.இந்த பிரச்சினையை பல அரசியல்வாதிகளிடமும் கூறி எந்த பயனில்லை.எனவே அவர் சோனு சூட்டின் உதவியை நாடியுள்ளார்.
அதன் பின் உடனடியாக சோனு சூட் ஜான்சி கிராமத்திற்கு போர்வெல் போடுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.உதவியை கேட்ட சில மணி நேரத்திலையே போர்வெல் போட்டு தண்ணீர் வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.பல ஆண்டுகளாக பலரிடமும் இதுகுறித்து உதவி கேட்டும் தண்ணீர் வசதி கிடைக்காத அந்த ஊர் மக்கள் சோனு சூட்டிடம் கேட்ட அடுத்த சில மணி நேரங்களிலையே தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுத்த ரியல் ஹீரோவுக்கு அவ்வூர் மக்கள் தங்களது நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.
????जल है तो जीवन है ???? @SonuSood pic.twitter.com/kAakl78K8I
— Sood Charity Foundation (@SoodFoundation) February 27, 2021