வரலாற்றில் இன்று (09-12-2019) :பிறந்தநாளை கொண்டாடும் சோனியா காந்தி

Default Image

சோனியா காந்தி  என்பவர் இத்தாலி வம்சாவளியைச் சேர்ந்த ஒரு இந்தியப் பெண் அரசியல்வாதி ஆவார்.இவர் 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார்.இவர் ராஜீவ் காந்தியுடனான திருமணத்தின் மூலம் நேரு-காந்தி குடும்பத்தில் உறுப்பினரானார். இவர் இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆவார். தன் கணவரின் படுகொலை நிகழ்ந்து ஏழு ஆண்டுகள் கழித்து 1998ஆம் ஆண்டு அக்கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து 10 ஆண்டுகள் அப்பொறுப்பை வகித்து வந்தார். அதன் பிறகு அவர் மகன் ராகுல் காந்தியை கட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். எனினும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் என்ற பொறுப்பில் சோனியா காந்தி நீடித்து வருகிறார்.ஆனால் தற்போது ராகுல் காந்தி தலைவர் பதவியை விட்டு வெளியேறிய நிலையில் சோனியா காந்தி இடைக்காலத் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

இந்திய அரசியலில் செல்வாக்கு மிகுந்த நபர்களில் ஒருவரான இவர்,2004ல் போர்பஸ் பத்திரிகையால் உலகில் மிகச் சக்திவாய்ந்த பெண்மணிகளில் 3வது இடத்திலும் 2007ல் அந்தப் பட்டியலின் தரவரிசையில் 6வது இடத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளார். மேலும் டைம் பத்திரிகையும் இவரை 2007 மேலும் அவர் 2008ம் ஆண்டு உலகில் உள்ள அதிகச் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராகத் திகழ்கின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்