காதலியை கரம்பிடித்தார் பாடலாசிரியர் சினேகன்.!

கமல்ஹாசன் முன்னிலையில் பாடலாசிரியர் சினேகன் – நடிகை கன்னிகாவின் திருமணம் நடைபெற்றுள்ளது.
பாடலாசிரியரும், மக்கள்நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி செயலாளருமான சினேகனும் நடிகை கன்னிகா ரவியும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தனர். இதனை தொடர்ந்து இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் இன்று நடைபெற்றுள்ளது.
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அனைவரது நலன் கருதி மிக எளிமையாகவும், தனிமனித இடைவெளியோடும், அரசு விதிமுறைகளோடும் சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண விழாவில், இயக்குநர் பாரதிராஜா உள்பட திரையுலக பிரமுகர்கள் மணமக்களை நேரில் வாழ்த்தியுள்ளனர். மேலும், ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகின்றார்கள்.
பாடலாசிரியர் சினேகன் தமிழில் 700-மேற்பட்ட படங்களில் 2500கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். மேலும், கோமாளி, உயர்திரு 420, ராஜராஜ சோழனனின் போர்வாள் , பூமிவீரன், யோகி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அதைபோல், நடிகை கன்னிகா ரவி சரித்திரம் பேசு, சத்திரபதி, தேவராட்டம், அடுத்த சாட்டை ஆகிய படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஆண்டவர் தலைமையில் கவிஞர் சினேகன் அவர்களின் திருமணம் இனிதே நடைப்பெற்றது@ikamalhaasan @MouryaMNM @maiamofficia @KavingarSnekan @NewsMaiam @Veerasimman2 pic.twitter.com/E1Nqj5dzRa
— MNM ???? திருவள்ளூர் தொகுதி (@MNMThiruvalur) July 29, 2021
நடிகர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற கவிஞர் சினேகன் – கன்னிகா திருமண விழாவில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்த பொழுது. pic.twitter.com/y6wmlb9bDv
— Dhanasekaran KKNagar (@dhanasekarandmk) July 29, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தமிழகத்தில் எங்கெல்லாம் எப்போது மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்…
February 24, 2025
NZvsBAN : டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச முடிவு!
February 24, 2025
ஈஷா யோகாவின் சிவராத்திரி விழாவுக்கு தடையில்லை! உயர்நீதிமன்றம் உத்தரவு!
February 24, 2025