காலமான பிரபல நடிகையின் மகன்.! சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்.!

Default Image

நடிகை வாணி ஸ்ரீ மகனான அபினய  வெங்கடேஷ் கார்த்திக் நேற்று இரவு மாரடைப்பால் காலமானதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் நடித்த பழம்பெரும் நடிகர், நடிகைகளில் சிலரை இன்றும் மனதில் நிற்பவர்கள் பலர் உள்ளனர். அவற்றுள் வசந்த மாளிகை, புண்ணிய பூமி, ஊருக்கு உழைப்பவன், நல்லதொரு குடும்பம் என பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வாணி ஸ்ரீ. இவர் தற்போது சினிமாவிலிருந்து விலகி சீரியல்களில் நடித்து வருகிறார். 

இந்த நிலையில் இவரது 36 வயது மகனான அபினய வெங்கடேஷ் கார்த்திக் நேற்று இரவு மாரடைப்பால் காலமானதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. காலையில் தூக்கத்திலிருந்து எழும்பாமல் இருந்து இவரை, சந்தேகமடைந்த குடும்பத்தினர் சென்று எழுப்புகையில் காலமானது தெரிய வந்தது. இதனையடுத்து பலர் இவர் மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறி வந்த நிலையில், தனது மகன் மாரடைப்பு ஏற்பட்டு தான் காலமானார் என்று வாணி ஸ்ரீ தரப்பிலிருந்து கூறியுள்ளனர். இந்த சம்பவம் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலர் தங்களது இரங்கல்களை அவரது குடும்பத்தினருக்கு அறிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 31122024
marina Beach
Seeman - Varunkumar
BirenSingh Manipur
Selvaperunthagai -bharth balaji
Puducherry Traffic Police
NewYear2025