கொரோனாவிலிருந்து துருவ் சார்ஜா மற்றும் அவரது மனைவி மீண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளார்
கன்னட நடிகரும், மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரரான துருவ் சார்ஜாவிற்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் துருவ் அறிவித்திருந்தார். இவர் நடிகர் அர்ஜுனின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது தானும், தனது மனைவியும் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்ததாக தனது டுவிட்டர் பக்கத்தில் துருவ அறிவித்துள்ளார். அதனுடன் உங்கள் அனைவரதும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி என்றும், நாங்கள் மீண்டு வந்தது சிரஞ்சீவி சார்ஜாவின் ஆசிர்வாதம் என்றும் கூறியுள்ளார். மேலும் எனது ஒவ்வோரு சூழ்நிலையிலும் எனக்கு தைரியமாக நின்ற அர்ஜூன் மாமாவிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அதனுடன் மருத்துவர் சுர்ஜித் பால் சிங் மற்றும் மருத்துவ உதவியாளர் ராஜ்குமார் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். சமீபத்தில் நடிகர் அர்ஜூனின் மகளான ஐஸ்வர்யா அர்ஜூனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…