தந்தையிடம் கார் வாங்க மகன் எடுத்த விபரீத முடிவால் மகன் கைது..!
- பெற்றோரை பி.எம்.டபிள்யூ செடான் காரை வாங்கி தராததால் ஷோரூமில் இருந்த பி.எம்.டபிள்யூ காரை சேதப்படுத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த நவம்பர் 25-ம் தேதி சீனாவில் உள்ள ஜியாங்சி பகுதியில் வசிக்கும் 22 வயது மதிப்புத் தக்க இளைஞர் ஒருவர் புதிய காரைப் வாங்குவதாக கூறி பி.எம்.டபிள்யூ ஷோரூமுக்குச் சென்று உள்ளார். அந்த இளைஞர் ஷோரூமில் சென்ற உடன் அவரின் கண்களில் ஷோரூமில் இருந்த நீல நிற பி.எம்.டபிள்யூ செடான் காரை பார்த்து உள்ளார்.
அவருக்கு அந்த பி.எம்.டபிள்யூ செடான் கார் மிகவும் பிடித்ததால் அந்த காரை வாங்க விரும்பி உள்ளார்.பின்னர் தனது தொலைபேசி மூலம் பெற்றோரிடம் பி.எம்.டபிள்யூ செடான் வாங்க வேண்டும் என பேசி உள்ளார்.
அதற்கு பெற்றோர்கள் மறுப்பு தெரிவிக்க இதனால் கோபமடைந்த அந்த இளைஞன் காரின் பின்புற கதவில் கீறி சேதப்படுத்தி உள்ளார். இதை ஷோரூமில் இருந்த கேமராவில் இந்த சம்பவம் பதிவு ஆகி உள்ளது. இதைத்தொடர்ந்து ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
கடைக்கு வந்த போலீசார் அவரிடம் விசாரித்தபோது , அந்த இளைஞர் தனது தந்தை தனக்கு ஒரு கார் வாங்கி தருவதாக கூறி இருந்தார்.ஆனால் அந்த வாக்குறுதி எனது தந்தை இன்னும் நிறைவேற்றவில்லை என போலீசாரிடம் கூறினார்.
இந்த சம்பவத்தின் வீடியோ சீன சமூக ஊடக தளமான வெய்போவில் வைரலாகியுள்ளது. இதனால் பலர் இந்த இளைஞருக்கு 22 வயதாக ஆகிறது. ஆனால் இவர் இன்னும் ஒரு குழந்தையைப் போலவே செயல்படுகிறார் என கூறி அந்த இளைஞருக்கு “பெரிய குழந்தை” என பெயர் வைத்து அழைத்தனர்.