கர்ப்பகாலத்தில் ஏற்படும் முதுகுவலியில் இருந்து விடுபட சில வழிகள்….!!!

Default Image

கர்ப்பகாலத்தில் அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கு முதுகுவலி வரக்கூடியது தான். கர்ப்ப காலத்தில் தலை முதல் பாதம் வரை உடலின் அனைத்து பாகங்களிலும் மாறுதல்களை உணர்வார்கள் கர்ப்பிணிப் பெண்கள். ஆனால் அதிலிருந்து விடுபட பல முயற்சிகள் மேற்கொண்டாலும் வலி அதிகரிக்குமே தவிர குறையாது. கர்ப்பிணி பெண்கள் கர்ப்பகாலத்தில் ஏற்படும் முதுகுவலியை இருந்து ஈடுபட சில வழிகள் இதோ…,

உடற்பயிற்சி :

 

கர்ப்பம் தரிக்கிற முயற்சியில் இருக்கும்போதிலிருந்தே வயிற்றுப் பகுதிகளுக்கான பயிற்சிகளை மேற்கொள்ளலாம். மருத்துவரின் ஆலோசனைகளை கேட்டு முதுகுப் பகுதியை பலப்படுத்தும் பயிற்சிகளை கர்ப்ப காலம் முழுவதுமே செய்து வரலாம்.

பாஸ்ச்சர் :

கர்ப்பத்தின் போது நாளாக  ஆக வயிற்றின் எடை அதிகரிப்பதால் உங்களையும் அறியாமல் முதுகை முன்னோக்கி வளைத்தபடி நிற்பீர்கள். அது தவறு. எப்போதும் போல நிமிர்ந்த நிலையில் நிற்கவே முயற்சியுங்கள்.உட்காரும்போது உங்கள் முதுகு பகுதியானது இருக்கையின் பின் பக்கத்தில் அல்லது குஷனில் சப்போர்ட் ஆகும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

மசாஜ் :

Related image

தாங்க முடியாத அளவுக்கு வலி இருந்தால் வெந்நீர் பை அல்லது வெந்நீர் நிரப்பிய பாட்டிலை டவலில் சுற்றி வலியுள்ள இடத்தில் இதமாக வைத்துக்கொள்ளலாம். மிதமான மசாஜ் கூட ஓரளவு வலியை குறைக்கும்.

 குறைந்த கலோரி உள்ள உணவுகள் :

கர்ப்ப காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடை அதிகரிக்கும். கடைசி 3 மாதங்களில் இது தீவிரமாக இருக்கும். கர்ப்பத்தின்போது மொத்தமாக 11 முதல் 16 கிலோ வரை எடை அதிகரிக்கலாம்.

Image result for குறைந்த கலோரி உள்ள உணவுகள்

முதல் 3 மாதங்களில் 1 முதல் 2 கிலோ, அடுத்தடுத்த 6 மாதங்களில் மாதத்துக்கு 1 முதல் 2 கிலோ வரை அதிகரிக்கலாம். எனவே, முதல் 3 மாதங்களில் கர்ப்பிணிப் பெண்கள் உட்கொள்ளும் உணவின் கலோரி அளவைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க வேண்டியதும் அவசியம்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்